Random image

கர்நாடக அணைகளில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மைசூரு:

ர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும்  மழை பெய்ய தொடங்கி உள்ளது.  இதன் காரணமாக, நிரம்பி வழியும் கபினி , கிருஷ்ணராஜசாகர் அணை களில் இருந்து  தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகுமலைப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே கபினி  அணை நிறைந்து உள்ள நிலையில்,  குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கனவே  கடந்த 20 நாட்களுக்கு முன்பு, சுமார்  25 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த ஜூன்  23-ந் தேதி  மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இடையில்  திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை கர்நாடகம் குறைத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கன மழை பெய்து வருவதால், கபினி, கிருஷ்ண சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

கபினி  அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், தற்போது 110 அடியை தாண்டி நீர்மட்டம் உள்ளது.  கனமழை தொடர்வதால் அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாக காவிரியில்  39ஆயிரம் கன நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.