3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாதா? தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை நாடுகிறது திமுக….

சென்னை:

மிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து, திமுக சார்பில் உச்சநீதி மனறத்தை நாட இருப்பதாகவு தகவல் வெளியாகி உள்ளது. காலியாக 21 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி உள்பட 40 தொகுதிகளுக்கும்,  ஏப்ரல் 18 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும். என நேற்று தேர்தல் ஆணையர் சுனில் அரோர அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஏப்ரல் 18 ஆம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கூறினார். அதே தேதியில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி  தேர்தல் தொடர்பான  வழக்குகள் நீதி மன்றத்தில்  நிலுவையில் இருப்பதால், ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், குறிப்பிட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி