லாஸ் ஏஞ்சல்ஸ்:

பஞ்சராகும் டயர்கள் தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் வகையில், முப்பரிமான (3D) அச்சிடப்பட்ட ரப்பர் கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த முப்பரிமான ரப்பர், 40 டிகிரி செல்சியஸிலிருந்து 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமூட்டி உருக்கப்படுகிறது.

இந்த அச்சிடப்பட்ட ரப்பர் 100 சதவீதம் உருகிய பின், டயருக்கு பஞ்சர் ஒட்டவோ, கிழிந்த பூட்ஸ்களை சரி செய்யவோ பயன்படுகிறது.

இந்த முப்பரிமான அச்சிடப்பட்ட ரப்பர், வானக பாகங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்கவும், டயர்களுக்கு கவசமாகவும் பயன்படுகிறது.

இதன் உற்பத்தி நேரம் குறைவானதாகும். இந்த முப்பரிமான (3D) ரப்பர் கருவி. இது விளையாட்டு ரோபோட்டிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களிலும் பயன்படுத்தலாம்.