தேர்தலையொட்டி 3நாட்கள் லீவு: 4 நாட்களில் 639 கோடி ரூபாய் கல்லா கட்டிய டாஸ்மாக்

சென்னை:

மிழகம் முழுவதும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது..

இந்த நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ள தாகவும், கடந்த 15ந்தேதி மட்டும் ரூ.215 கோடி அளவுக்கு மதுவிற்பனை படு ஜோராக நடைபெற்றுள்ளது என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுவதும் பாராளுமன்ற பல கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு தொடர்  விடுமுறை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.

இதன் காரணமாக மது பிரியங்கள் முன்கூட்டியே டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி தங்களது இருப்பிடங்களில் பதுக்கிக்கொண்டுள்ளனர்.

கடந்த 12-ந்தேதி மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை  ரூ.117 கோடி என்றும், அதுவே  13-ந்தேதி ரூ.141 கோடியாக அதிகரித்த நிலையில், 14-ந்தேதி (தமிழ் புத்தாண்டு) ரூ.165 கோடியை எட்டியதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், விடுமுறை நாளுக்குக்கு முந்தைய நாளான  15ந்தேதி மட்டும்  டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை தினங்களான  3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை போட்டி, போட்டு மதுபிரியர்கள் பாட்டில் பாட்டிலாக வாங்கி சென்றனர். அன்றைய தினம் மட்டும் ரூ.216 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 4 நாட்களில் மொத்தமாக  ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பபதாகவும்,  அதிக பட்ச மாக மதுரை மாவட்டத்தில் ரூ.139 கோடியும், அதைத் தொடர்ந்து  சென்னையில் ரூ.136 கோடி, திருச்சி ரூ.133 கோடி, சேலம் ரூ.120 கோடி, கோவை ரூ.111 கோடி என மது விற்பனையாகி  இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி