விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்

சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும்  புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் பிற்பகல் 3 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியிலும், புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியிலும் நடை பெற்று வருகிறது.  வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வ னும் திமுக சார்பில் புகழேந்தியும் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குனேரி தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.22 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிற்பகல் 3 மணி  அளவில் 56.16 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி