3வது அணி மும்முரம்: ஆட்சி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி முக்கிய ஆலோசன…..

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மத்தியில், மாநில  கட்சிகளுடன் துணையுடன்  புதிய ஆட்சி அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3வது அணி அமைப்பதில் சில கட்சித்தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

இதையடுத்து, வரும் 21-ந்தேதி அன்று டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள்  ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 23ந்தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17வது மக்களவையை கட்டமைக்க நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நாட்டை ஆண்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி, தாங்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என காங்கிரஸ், திமுக உள்பட கூட்டணி கட்சிகள் அறிவித்து உள்ளன.

இந்த நிலையில்  இரு தேசிய கட்சிகளுக்கு மாற்றாக 3வது அணியை உருவாக்க மம்தா, மாயாவதி, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

542 தொகுதிகள் உள்ள லோக்சபாவில், ஆட்சியைப் பிடிக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 3வது ஆட்சியை அமைக்கும் வகையில் மாநில கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறது. இதற்கான முயற்சியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ்  ஈடுபட்டுள்ளார். அவர்கள் ஏற்கனவே பல மாநிலக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வெளியாகும் முன்பே 3வது அணி அமைக்கப்பட்டு விட வேண்டும் என்பதில் மும்முரமாக செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில், வரும் 19-ந்தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிந்ததும் மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்த முடிவு இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம்  வரும்  21-ந்தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், பாஜக ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்பாகவும், புதிய பிரதமர் தேர்ந் தெடுக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்றும்,  3வது அணியின் ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் அல்லது ஆட்சியில் பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி