வெஸ்ட் இண்டீஸ் 283 ரன்கள் குவித்து சாதனை – வெற்றி பெறும் முனைப்போடு விளையாடும் இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை குவித்துள்ளது. பும்ரா அசத்தலான பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து போட்டியை வெல்லும் முனைப்போடு இந்திய அணி விளையாடி வருகிறது.

match

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கடைசி வரை மிரட்டியது. கடைசி நேரத்தில் போட்டி டிராவில் முடிந்தது.

இதையடுத்து இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த போட்டியிலும் சாய் ஹோப் மிக சிறப்பாக பேட்டிங் செய்து 95 ரன்களை குவித்து அசத்தினார்.

மற்றொரு வீரர் சிம்ரான் ஹெட்மியர் 21 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 37 ரன்கள் விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் 32 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுக்க, கடைசியில் வந்த ஆஸ்லே நர்ஸ் அட்டகாசமாக விளையாடினார். வெறும் 22 பந்துகளை எதிர் கொண்டு 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 283 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் ஹேம்ராஜின் விக்கெட்டை பறந்து சென்று கேட்ச் பிடித்து தோனி அசத்தினார். அதே போல் அதிரடி பேட்ஸ்மேன் சிம்ரான் ஹெட்மியரின் விக்கெட்டை மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து தோனி கைப்பற்றினார். கடந்த இரு போட்டிகளில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் முன்னனி இந்திய பவுலர்களனா பும்ரா, புவனேஸ்வர் குமாரை அணிக்கு அழைத்தனர்.

பும்ரா மிக சிறப்பாக பந்துவீசி 10 ஓவரில் 35 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது 65, சஹால் 56, குல்தீப் 52 ரன்கள் என ரன்கள் விட்டுக் கொடுத்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்களை எட்டினர்.

இதனையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்தியாவின் தொடக்க ஆட்ட வீரரான ரோஹித் 8 ரன்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் தவானுடன் விராட் கோலி இணை சேர்ந்தார். இந்த போட்டிலும் அதிரடி காட்டிய கோலி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். தவான் 35 ரன்களில் ஆட்டமிழக்க ராயுடு கோலியுடன் கைகோர்த்து விளையாடி வருகிறார். இந்நிலையில் 25 ஓவர்கள் முடிவில் 2விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.