3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

india

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. இதனையடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டி டையில் முடிந்தது.

தொடர்ந்து இன்று புனேயில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் உமேஷ், ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு மாற்றாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்தியாவில் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த சாதனையைச் சமன் செய்வார். புவனேஷவர் குமார் இன்று 4 விக்கெட்டுகள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டுவார்.