செப்.11: வேளாண் பல்கலைக்கழகத்தின் இறுதிக்கட்ட கலந்தாய்வு!

சென்னை:

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட (3வதுகட்ட)  கலந்தாய்வு வரும் 11-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடைசி கட்ட கலந்தாய்வு வரும் 11ந்தேதி முதல்  3 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளிலும் நடத்தப்படும் 13 பட்டப் படிப்புகளுக்கான இரண்டு கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,627 இடங்களுக்கு ஏற்கனவே நடைபெற்ற  கவுன்சிலிங் போக, சுமார் 600 காலியிடங்கள் இருப்ப தால் 3-ஆம் கட்ட கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இறுதி கட்ட கவுன்சிலிங் வரும் 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் கலந்தாய்வுக்கு 2,500 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  அதற்கு வருப வர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அடுத்த 2 நாள்களும் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.