டெல்லி:

ன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் 3வதுமுறையாக நடத்திய ஆலோசனையில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கை மே 16ந்தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி  2வது கட்டமாக  மே 3 வரை ஊரடங்குஅமலில் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் சில மாநிலங்களில் கட்டுக்குள் வராமல் உள்ளதால், ஊரடங்கை மே 16 வரை 3வது கட்டமாக நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய முதலமைச்சர்கள் தாங்கள் விரும்புவதையும், தங்கள் மாநிலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவாதித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

மேலும்,   தமிழகம் உள்பட சில மாநிலஅரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற முடிவு செய்துள்தாக கூறி இருக்கிறது. கேரள முதல்வர்  பிரதமருடனான  ஆலோசனையை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக மத்திய அரசின் தலையீட்டைக் கோரினார். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான நிதி உதவி மற்றும் மானியங்கள் கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரதமர் மோடி,  மத்திய அமைச்சரவை மற்றும் அதிகாரிகளிடம் விவாதித்து விரைவில் முடிவை அறிவிப்பார் என்றும்,   மாநில முதலமைச்சர்களின் விருப்பப்படி பல மாநிலங்களில் மே 16ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.