3வது கட்ட வாக்குப்பதிவு 1மணி நிலவரம்: சராசரியாக 35.74 சதவிகிதம், குஜராத்தில் 40%

காந்திநகர்:

நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்றைய வாக்குப்பதிவானது மதியம் 1 மணி நிலவரப்படி,சராசரியாக 35.74 சதவிகிதமும், குஜராத்தில் 40% பதிவாகி இருப்பதாக தேர்தல்ஆணையம் அறிவித்து உள்ளது.

அசாம் – 46.61 சதவிகிதம்

பீகார் – 37.05

கோவா – 42.13

குஜராத்  -40

ஜம்மு காஷ்மீர்  4.72

கர்நாடகா – 36.29

கேரளா – 37.59

மகாராஷ்டிரா – 27.34

ஒடிசா – 31.22

திரிபுரா – 34.49

உத்தரபிரதேசம் – 29.53

மேற்க வங்கம் – 52.41

சந்திஷ்கர் – 41.65

தாத்ரா நகர் ஹவேலி – 21.62

டாமன்டையூ – 41.38

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இங்கு சராசரியாக 40 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், டாஹோட், சோட்டா, உதேபுர், வல்சாத், பார்டோலி பகுதியில் சராசரியான வாக்குப்பதிவும், போர்பந்தரில் குறைவான அளவிலும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்றைய வாக்குப்பதிவின்போது முக்கியமான ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர், உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.