பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக  சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபா ரிகளுக்கு தமிழகஅரசு நிவாரணம் வழங்கி வருகிறது.

சென்னையில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு ஏற்கனவே 2 கட்டமாக தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3வது கட்டமாக ரூ.1000 வழங்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் 27,195 பேர் மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூ 1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக வியாபாரிகள் தங்களின் வங்கிகணக்குகளை மாநகராட்சியிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நிவாரணத் தொகை பெறாத பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் சென்னை மாநகராட்சியை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.