3வது அணியா? தெலுங்கானா முதல்வர் 4மாநிலங்களில் திடீர் சுற்றுப்பயணம்

ஐதராபாத்:

மீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில், தனிஒருவனாக நின்று அபார வெற்றி பெற்ற தெலுங்கானா மாநில முதல்வர், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் 4 மாநிலங் களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது அரசியல் கட்சித்தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்காளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கு  நாளை ( டிசம்பர் 23)  முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

நாளை  விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல்வர் சந்திரசேகர ராவ், முதலில் ஆந்திரா செலகிறார். அங்குள்ள விசாகப்பட்டினத்திலுள்ள பேகும்பேட் விமான நிலையம் வரும் முதல்வர் சந்திரசேகர ராவ், ராஜஸ்யமலா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.

தொடர்ந்து,  சுவாமி ஸ்வருபநன்தேந்திராவின் ஆசிரமத்திற்கு செல்பவர் அங்கு மதிய உணவு அருந்திவிட்டு அன்று மாலை ஒடிசா செல்கிறார்.  அங்கு மாநில முதல்வர்  நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து,  ஒடிசா மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு கே.சி.ஆர். சென்று தரிசனம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில்ன்போது,  பிரதமர் மோடி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேர்தல் முதன்மை கண்காணிப்பாளர் சுனில் அரோரா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரையும் சந்தித்து பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரசேகரராவின் இந்த சுற்றுப்பயணம்  ஆன்மிக பயணம் என்று கூறப்பட்டாலும், காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் வகையில்,  3வது அணி அமைக்கும் வகையிலேயே அவரது சுற்றுப்பயணம் இருப்பதாக கூறப்படுகிறது.