லண்டன்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், முதலில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 1 விக்கெட்டை இழந்து 15 ரன்களை எடுத்துள்ளது. டாம் சிம்ளி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் கெமார் ரோச்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இங்கிலாந்திற்கு பயணம் செய்து, காத்திருப்பு காலத்தை முடித்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது விண்டீஸ் அணி.
இந்நிலையில், டெஸ்ட் தொடர் ஏற்கனவே 1-1 என்று சமனாகியுள்ள நிலையில், இந்த இறுதி டெஸ்ட் போட்டியை வென்றால், விண்டீஸ் அணி தனி சாதனை படைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.