’பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி: புஜாரா, மாயங்க் அரைசதம் கடந்த நிலையில் இந்திய அணி 215/2

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மாயங்க் அகர்வால் மற்றும் புஜாரா அரைசதம் கடந்த நிலையில் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

pujara

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

இந்நிலையி இரு அணிகளும் மோதும் ’பாக்சிங் டே’ வான 3வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக தொடங்க வீரர்களாக ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

போட்டி தொடங்கியதும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த விஹாரி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த புஜாரா, அகவாலுடன் இணை சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை சுலபமாக சமாளித்து வருகின்றனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர். ஒருசில பவுண்டரிகளை அடித்த புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 21வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்துள்ளது. கோலி 47 ரன்களும், புஜாரா 68 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்.