மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’ – தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதன்மூலம், தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 583 ரன்கள் குவித்தது. பின்னர், பதிலுக்கு 273 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. ஆனால், போட்டியின்போது மழை குறுக்கிட்டு 4வது மற்றும் 5ம் நாள் ஆட்டங்கள் பெரியவில் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், இறுதிநாளில் பாகிஸ்தான் அணி 187 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்தபோது, ஆட்டம் ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

You may have missed