ராஞ்சியில் 3வது டெஸ்ட் மேட்ச்: ஆஸ்திரேலியா நிதானமான ஆட்டம்!

ராஞ்சி,

ந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்கியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

புனேவில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்து பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றியை வசப்படுத்தின. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் இன்று 3வது டெஸ்ட் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் புகுந்தது.

மாலை டீ இடைவேளையின்போது  ஆஸ்திரேலிய அணி  85 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவன் ஸ்மித் 109 ரன்னுடனும், கிளென் மேக்ஸ்வெல் 74 ரன்னுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.

அஸ்வின் ஒரு விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆட்டம் நிதானமாக நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு டெஸ்ட் மேட்சில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்  மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக  பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா விளையாடும் 800வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள்: கோஹ்லி (கேப்டன்), எம்.விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே, சாஹா, அஷ்வின், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர், உமேஷ், கருண், ஜெயந்த், குல்தீப், முகுந்த்.

ஆஸ்திரேலிய வீரர்கள்: ஸ்மித் (கேப்டன்), வார்னர், ரென்ஷா, ஏகார், ஜாக்சன் பேர்டு, பேட் கம்மின்ஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஹேசல்வுட், கவாஜா, லியான், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஓ கீப், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், மேத்யூ வேடு.

Leave a Reply

Your email address will not be published.