3வது முறை இரட்டை சதம்: உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா

மொகாலி,

லங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3வது முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற  டெஸ்ட் தொடரின்போது படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில்  தர்மசாலாவில் நடந்த முதலாவது ஒரு நாள்  ஆட்டத்தில்  7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது  2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கி யது.  டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பந்துவீச்சைத்தேர்வு செய்தார்.

இதையடுத்து ரோகித் சர்மாவும் தவானும்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்திய வீரர்கள் ஆட்டத்தை நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடிவந்தனர்.

இந்த நிலையில், 68வது ரன்னில் கேட்ச கொடுத்து  தவான் வெளியேற தொடர்ந்து ஸ்ரோயாஸ் ஐயர் களமிறங்கினார்.

40வது ஓவரின்போது ரோகித் சர்மா 100 ரன்னை கடந்து சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார்.

153 பந்தில் அவர் இரட்டை சதத்தை தாண்டியது உலக சாதனையாகும். இந்த இரட்டை சதத்திற்காக ரோகித் 16 பவுண்டரிகளையும், 12 சிக்சர்களையும் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவுக்கு இது ஒருநாள் போட்டியில் 3வது இரட்டை சதமாகும். இது  உலக சாதனை.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் விளையாடிய ஒரு நாள் ஆட்டங்களின்போது  இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 392 ரன் எடுத்த நிலையில் இந்தியா ஆட்டத்தை நிறைவு செய்தது. இன்றைய ஆட்டத்தின்போது ரோகித் சர்மா 208 ரன்னும், தவான் 68 ரன்னும், ஐயர் 88 ரன்னும் எடுத்திருந்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3rd time double century: Rohit Sharma created world record, 3வது முறை இரட்டை சதம்: உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா
-=-