சென்னையில் 4 பகுதிகள் சவாலானாவை…. கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்…

--

சென்னை:

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் 4 பகுதிகள் சவாலானாவை என்று தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பரவலை கட்டுப்படுத்த நோடல்  அதிகாரியாக முன்னாள் சென்னை மாநகர ஆணையாளர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன்,   ஏடிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், அபஸ்குமார், அம்ரேஷ் பூஜாரி, அபய்குமார் ஆகியோரும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் சென்னையில் கொரோனா தடுப்பு குறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுங்ன  ஆலோசித்து வருகின்றனர்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் கட்டாயம்  மாஸ்க் அணிய வேண்டும். இல்லையென்றால், துணியை மாஸ்க் போல் அணிய வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 25 சதவீதம் பேர் மாஸ்க் அணியவில்லை. மாஸ்க் அணிவதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பதுடன், மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள திருவிநகர் ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகள் சவாலான பகுதிகளாக  கண்டறியப்பட்டு உள்ளது. அந்த  புகுதிகளில் உள்ள மக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தாமாக பரிசோதனைக்கு வர வேண்டும். வீடுவீடாக தேடி சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை நடக்கிறது.

ஒவ்வொருவரும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சிலர் பேசும்போது மாஸ்க்கை கழற்றிவிட்டு பேசுகின்றனர். இது தவறு.

அதிகாரிகள் உட்பட யாராக இருநதாலும் பேசும் போது கூட மாஸ்க் அணிய வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

உணவு மற்றும் காய்கறி டெலிவரி செய்யும் நபர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து 10 நாளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்

நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. செ

ன்னை விஆர் பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

You may have missed