4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் 22ந்தேதி அறிவிக்கப்படும்: டிடிவி தினகரன்

சென்னை:

மிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

நேற்று நடைபெற்ற  அமமுக கட்சியின் நிர்வாகிகள்  கூட்டத்தில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட தாகவும் அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  அமமுக கட்சியின் தலைவர் சசிகலா என்றும், அவரிடம்  ஆலோசனை நடத்திய பிறகே தான்  பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார். கட்சியை பதிவு செய்ய  முடிவு செய்துள்ளதாக கூறியவர், நடைபெற உள்ள  4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் வரும் 22ந்தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அப்போது சின்னம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நாடாளுமன்ற தேர்தலில் தரப்பட்ட பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியு இருப்பதாகவும் கூறி உள்ளார். சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

You may have missed