அகமதாபாத்: குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குஜராத்தில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் இரவு ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கை பிப்ரவரி 15ம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய மெட்ரோ நகரங்களில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

தற்போதைய கணக்குப்படி குஜராத்தில் 3,589 பேர் கொரோனா தொற்றால் வுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,52,927 பேர் குணமடைய, 4,385 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.