4தொகுதி இடைத்தேர்தல்: 1ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் டிடிவி தினகரன்

சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக வேட்பாளர்களை ஆதரித்து,  மே 1-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கு கிறார்  அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும்  மே 19ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனை போட்டி  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது குறித்து அ.ம.மு.க. தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் ஐ.மகேந்திரனை ஆதரித்து, அந்த தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடுத்த மாதம் 1, 2, 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பி.எச்.சாகுல் ஹமீதை ஆதரித்து 3, 4, 10, 14 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் ஆர்.சுந்தரராஜை ஆதரித்து 5, 6, 11, 15 ஆகிய தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதே போல்

சூலூர் தொகுதிக்குபட்ட பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் கே.சுகுமாருக்காக 7, 8, 12, 13 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.