தென்காசி அருகே 4நாள் பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை!

சங்கரன்கோவில்: தென்காசி அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை எரித்து கொல்லப் பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டி உள்ள மூடிக்கிடந்த தியேட்டர் வளாகத்தில்,  பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

துணியில் சுற்றி குழந்தையை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தை உயிரிழந்த நிலையில், எரிந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெண் சிசு கொலை மீண்டும்  தலை தூக்க  தொடங்கிய நிலையில், தற்போது ஆண்குழந்தை எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எரிக்கப்பட்ட குழந்தை யாருடையது,அதை எரித்தவர்கள் யார், என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.