சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோவில் 4 நாள் இலவச யோகா பயிற்சி

சென்னை:

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில்  4 நாட்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்ப்டடு உள்ளது.

இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் யோகா தினம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு, கின்னஸ் சாதனையும் நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில்  4 நாட்களுக்கு யோகா பயிற்சி இலவசமாக நடத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. காலை மாலை என 8 ரெயில் நிலை யங்களில் 4 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாவது,

சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி (இன்று) முதல் 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.

இப்பயிற்சிகளை யோகா ஆசான் சுத்தவெளி சபை ஏ.என்.தனசேகரன் நேரில் அளிக்கிறார்.  பயிற்சியில் 3 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டோர் வரை அனைவரும் கலந்துகொண்டு பயிற்சிகளை பெறலாம்.

யோகா மற்றும் தியானப்பயிற்சிகள்  இன்று காலை 6.30 மணி முதல் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற்றதாகவும்,  மாலை 6 மணி முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை ( 22-ந் தேதி)  காலையில் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்திலும், மாலையில் டி.எம்.எஸ் ரெயில் நிலையத்திலும், நாளை மறுதினம் ( 23-ந் தேதி)  காலையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திலும், மாலையில் அண்ணாநகர் டவர் ரெயில் நிலையத்திலும், வரும்  24-ந் தேதி காலையில் திருமங்கலம் ரெயில் நிலையத்திலும், மாலையில் செனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர் மெட்ரோ ரெயில் பயணம் உங்கள் பயணத்தை சுகமாக்கும். தொடர் யோகா பயிற்சிகள் உங்கள் உடல்நலனை வலுவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.