சென்னை:

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கட்சியின் வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்கும், மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் கூட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

வரும் 10ம் தேதியன்று கரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கும், 11ம் தேதி திருவண்ணாமலை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் எ

12ம் தேதி தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், 13ம் தேதி சென்னை, நெல்லை, காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.