4துணை முதல்வர் பதவி – மாணவர்களுக்கு இலவச பெட்ரோல்! புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தியின் அதிரடி டயலாக்!

சென்னை: இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள முன்னாள் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, 4துணை முதல்வர் பதவி – மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அள்ளி வீசியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் இந்த கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.கட்சி பெயரை அறிவித்த அர்ஜூன மூர்த்தி, பின்னர் கட்சி தொடர்பான அறிவிப்புகளை அறிவித்தார்.

 ’’இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லைஆணவத்தால் வரும் மதமும் இல்லை…’’ என டயலாக்குகளை உதிர்த்தார்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன், இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இமமுக ஆட்சிக்கு வந்தால் நான்கு துணை முதல்வர் இருப்பார்கள் எனவும் அறிவித்துள்ளார்.