மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

--

புதுடெல்லி:

டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது.

டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துத்துவமனை சவக்கிடங்கில் 108 உடல் இருப்பதாகவும், இங்கு உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் 80 பலகைகள் மட்டுமே உள்ளதால், எஞ்சிய 28 உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக தரையில் வைக்கப்பட்டுள்ளதாக சவக்கிடக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தகனம் செய்ய நிகாம்போத் காட் சி.என்.ஜி தகன மேடைக்கு அனுப்பப்பட்ட 8 உடல்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளன. அங்குள்ள ஆறு மின் தகன மேடைகள் மட்டுமே இயங்கி வருவதால், அதிகளவிலான உடல்களை தகனம் செய்ய முடியாது என்று அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிக்கிச்சை அளிக்கும் பெரிய அளவிலான மருத்துவமனையாக லோக் நாயக் மருத்துவமனை விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்களும் உள்ளன. இந்த உடல்கள் பாதுகாப்பு கவசங்களுடன் தனியாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் 2 ஆயிரத்து 242 பேரில் 602 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா உயிரிழப்புகளால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

டெல்லியில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, மொத்தமாக 15 ஆயிரத்து 257 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தக் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 303-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து தகனம் செய்ய செல்லும் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இதுக்குறித்து பேசிய மருத்துவமனை அதிகாரிகள், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்த உடல்களையும் எங்கள் தகனம் செய்ய முடியவில்லை. சவக்கிடங்கு முழுவதும் இறந்த உடல்கள் நிறைந்து வழிகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பு உடைகளுடன் தனியாக பாதுகாக்க வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் 28 உடல்களை வைக்க இடமின்றி தரையில் படுக்க வைத்துள்ளோம். மேலும் இடம் தேவைப்படும் பட்சத்தில், ஒன்றன் மேல் ஒன்றாக உடல்களை அடுக்கி வைக்க உள்ளோம். கடந்த வாரம் இங்கு 34 உடல்கள் இருந்தது என்றும் கூறினார்.

நிகாம்போத் காட் மின்சார தகன மேடையில் ஆறு சி.என்.ஜி உலைகளில், மூன்று கடந்த திங்கட்கிழமை வரை வேலைச் செய்துள்ளது. இதில் ஒரு ஒருவர் இரவு பகலாக பணியாற்றியுள்ளர்.

இதுகுறித்து தகன மேடை நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மின்சார தகன மேடையில் எவ்வளவு உடல்களை ஏற்ற முடியும்? முடிந்த அளவு பணியை செய்கிறோம். அதிகளவில் இருந்த உடல்களை திரும்ப்பி அனுப்பினோம் என்றார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிக நேரம் பணியாற்றியதால், நாங்கள் 15 உடல்களை மட்டுமே ஏற்றுக்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், எச்.டி குழு நிகம்போத் காட் சென்ற போது, ​​தொழிலாளர்கள் சேதமடைந்த மூன்று உலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றொரு குழு தொழிலாளர்கள் நான்காவது நாளில் பணியில் இருந்தனர். சேதமடைந்த மூன்று தகன மேடைகளை சரி செய்ய குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நிகாம்போத் காட் தகன மேடையின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய்க்கு முன், தகனம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கியது. இப்போது காலை 7 மணிக்கு திறந்து இரவு 10 மணி வரை இயங்குகிறது. மேலும் ஒரு உடலை அப்புறப்படுத்த தொழிலாளர்களுக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் தேவைப்படுகிறது. சாம்பலைச் சேகரிக்க அதிக நேரமாகிறது என்று கூறினார்.

தகனத்தில் செயல்படாத உலைகளால் உடல்களை அகற்றுவதற்கான பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று லோக் நாயக் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு வரை எங்களுக்கு பிரச்சினைகள் இருந்தன. இப்போது அது வரிசைப்படுத்தப்படுகிறது. சடலங்கள் மற்ற தகனங்களுக்கும் அனுப்பப்படுகின்றன என்றார்.

மரத்தைப் பயன்படுத்தி தகனம்

வட டெல்லி மாநகராட்சியின் துணை ஆணையரும் செய்தித் தொடர்பாளருமான ஈரா சிங்கால் கூறுகையில், மரங்களை பயன்படுத்தி தகனங்களை தகனம் செய்ய குடிமை நிறுவனம் இப்போது உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

தகனம் செய்ய நிலுவையில் உள்ள உடல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயெ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிக்கலைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மூன்று சி.என்.ஜி உலைகள் வேலை செய்தன, ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, ஒன்று சிக்கலை உருவாக்கியது. உலை சரிசெய்யப்படுகிறது. இன்று முதல் எங்களால் அதைப் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்

You may have missed