கோவை மாநகராட்சி ஆணையர் உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி கலெக்டர் உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் ஜடாவத் வேளாண்மதுறை துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 3ம் மொழி குறித்த பிரச்னையின் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், கோவை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழனி கோவில் நிர்வாக அதிகாரியான ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.