சென்னை:

நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயத்துக்கு தேவையான பணங்களை ப்பெற வங்கிகளில் தங்களது நகைகளை வைத்து கடன் பெறுவது வழக்கம். இதற்கு 11 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 4சதவிகிதம் வட்டி மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த 4 சதவிகித மானிய வட்டியை மத்தியஅரசு ரத்து செய்து உள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேல், 7% வட்டியில் இனி விவசாய நகைக்கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் நகைகளை வைத்து விவசாய கடன் பெறும் வட்டி 7 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில்,  கடந்த 2015ம் ஆண்டு 11 சதவிகிதமாக மத்தியஅரசு உயர்த்தியது.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வட்டியில் 4 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும் என்றும் 7 சதவிகித வட்டியே வசூலிக்கப்படும் என  மத்தியஅரசு அறிவித்து.

இந்த நிலையில், விவசாயிகளுக்கான மானிய வட்டியில், விவசாயிகளாக இல்லாதவர்களும் விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், மத்தியஅரசு வழங்கி வந்த 4 சதவிகித மானியத்தை ரத்து செய்துள்ளது. இனி மேல், 7 % வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கக்கூடாது  என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கடந்த  அக்டோபர் 1ந்தேதி  முதல் வழங்கப்பட்ட விவசாய நகை கடன் வட்டியை உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்த விவசாயிகளிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.