மணாலி-லே நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பிப்பு

--

இமாச்சலப் பிரதேசம்:

மணாலி-லே நெடுஞ்சாலையில் 4 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.


நாட்டின் பல பகுதிகளில் 45 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. கோடையை சமாளிக்க மலைப் பிரதேசங்களை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளுகுளு பிரதேசமான மணாலியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் அதிக அளவு பயணிகள் குவிந்ததால் மணாலி-லே நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

4 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் அங்குலம், அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதேபோல், நாட்டின் பல இடங்களில் மலைப் பிரதேசங்களில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.