இறந்த எருமையை எடுத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குத்ல்

ஹாத்ராஸ், உத்திரப் பிரதேசம்

த்திரப் பிரதேச மாநிலத்தில் இறந்து போன எருமையை எடுத்துச் சென்ற நான்கு இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசு பாதுகாப்பாளர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் கும்பல் ஒன்று ஒரு இளைஞரை அடித்துக் கொன்றது தெரிந்ததே.   அந்த இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கியது.   அந்த சர்ச்சை ஓயும் முன்னரே மற்றொரு கூட்டு வன்முறை நிகழ்ந்துள்ளது.

தலைநகர் டில்லியில் இருந்து சுமார் 200 கிமீ தூரம் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹாத்ராஸ் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் நான்கு இளைஞர்கள் ஒரு இறந்த எருமையை ஒரு மினி லாரியில் எடுத்துச் சென்றுள்ளனர்.   அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து அவர்கள் அந்த எருமையை திருடிச் செல்வதாக சந்தேகம் கொண்டு கேள்விகள் கேட்டுள்ளன.

அதற்கு அவர்கள் ”நாங்கள் திருடர்கள் இல்லை.  ஒரு ஒப்பந்ததாரரிடம் வேலை செய்கிறோம்.   அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு எருமை இறந்து விட்டதால் அதை எடுத்துச் செல்ல எங்கள் முதலாளி உத்தரவிட்டுள்ளார்.  அதனால் நாங்கள் அந்த எருமையை எடுத்துச் செல்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.    அந்த கும்பல் அவர்கள் சொன்னதை நம்பாமல் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

விவரம் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அந்த நான்கு இளைஞர்களையும் மீட்டுள்ளனர்.   காவல்துறையினர் அந்த நால்வர் கூறிய எருமை மாட்டின் சொந்தக்காரரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த நால்வர் கூறியது உண்மை என கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி, “நாங்கள் சரியான நேரத்துக்கு செல்லவில்லை எனில் அந்த கும்பல் இந்த நால்வரையும் அடித்தே கொன்று இருக்கும்.  நால்வரில் இருவர் இந்து மதத்தையும் இருவரும் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவரக்ள் ஆவார்கள்.   எனவே இந்த விவகாரம் மதத்தினால் ஏற்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி