கேரளாவில் பரிதாபம்: 4 மாத கைக்குழந்தை கொரோனாவுக்கு பலி…

--

மலப்புரம்:

கேரள மாநிலத்தில் 4 மாத பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோ தொற்று தொடங்கிய  கேரளாவில், தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. அங்க இதுவரை 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 324 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம்  வயநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 4 மாத பெண் குழந்தைக்கு சில நாட்களாக காய்சசல் சளியாக அவதிப்பட்ட நிலையில், அந்த குழந்தைக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில், கொரோனா அறிகுறி உறுதியானது.

இதையடுத்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று காலை அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தது.

இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  இதையடுத்து குழந்தை சிகிச்சை பெற்ற  இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 5 டாக்டர்கள், செவிலியர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த குழந்தையின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.