மராத்தா போராட்டத்தால் மேலும் 4 எம் எல் ஏ ராஜினாமா

--

மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை ஒட்டி பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இன மக்கள் பல கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர்.    அவர்கள் தங்களின் முக்கிய கோரிக்கையாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு கோரி உள்ளனர்.   இந்த போராட்டத்தினால் மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு கடும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறது.   இந்நிலையில் மராத்தா போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா மற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

அந்த பரபரப்பு ஓயும் முன்பே இந்த போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.   இதுவரை இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மொத்தம் 6 சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் இருவர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.