‘காலா’ படத்தில் …  தேசிய விருது வென்ற நால்வர்!

ஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஒருசில நாட்களுக்கு முன்பு  நடிகர் தனுஷ் வெளியிட்டார்.  படத்தின் பெயர் காலா கரிகாலன் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலா படத்தின்  ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரஜினி நடிக்கும் காலா படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தயாரிப்பில்  பா.ரஞ்சித் இயக்கும் அப்படத்தில் தேசிய விருது வென்ற நான்குபேர் பணியாற்ற உள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். காக்கா முட்டை, விசாரணை படங்களை தயாரித்ததற்காகவும் அவர் இருமுறை விருது பெற்றுள்ளார்.

இப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 7 முறை தேசிய விருதை வென்றவர்.

படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி விசாரணை படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றவர்.

இப்படத்தின் நாயகி அஞ்சலி படேல் தெலுங்கில் ‘நா பாங்காரு தல்லி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.