டில்லி:

ச்சநீதிமன்றத்துக்கு தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள்  நாளை  (செப்டம்பர்.23) பதவியேற்க உள்ளனர்.

உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக, இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்ரமணியன், பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு தேர்வு செய்து  மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி அறிவித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து, புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 4 நீதிபதிகளும், நாளை  உச்சநீதி மன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்க  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய் துவைக்கிறார்.

ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.