தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இடம்: திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

அமராவதி: 

ந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், தேவஸ்தானம் தலைவராக  ஒய்.வி. சுப்பா ரெட்டியை நியமித்தார். தற்போது திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பதி எழுமலையான் கோவில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பா ரெட்டி கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவர் , கர்நாடக மாநிலத்தில்3 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 24 பேர் கொண்ட உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அ மேலும் அலுவலக வேலைகளுக்காக 4 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன், எஸ்.ஸ்ரீனிவாசன், டாக்டர் நஷிதா முத்தவரப்பு, குமரகுரு எம்எல்ஏ (அதிமுக) ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

You may have missed