வேலூரில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

--

வேலூர்:

வேலூர் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயின் கிணற்றில் 4 பேர் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த ரேவதி, சங்கரி, தீபா, மணீஷா ஆகியோர் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.