4 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: தமிழக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?

--

டில்லி:

ந்த ஆண்டுடன் சட்டமன்ற பதவி காலம் முடிய உள்ள 2 மாநில சட்டமன்றம் மற்றும் அடுத்த ஆண்டு தொடக் கத்தில் முடிவுபெற உள்ள 2 மாநில சட்டமன்றம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. அத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய  நான்கு மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

அத்துடன்   சமீபத்தில் ஆட்சி கலைக்கப்பட்ட தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் குறித்த விவரம் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெலுங்கானா மாநில தேர்தல் தனியாக நடத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது

மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.