ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி…! நதியில் மூழ்கி உயிரிழந்த சோகம்

சென்னை: தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற 4 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர். அந்நாட்டில் மருத்துவம் படிப்பது எளிது மற்றும் செலவும் குறைவு என்பதால் பல மாணவர்கள் சென்று வருகின்றனர்.

இந் நிலையில் தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற 4 மாணவர்கள் அங்குள்ள ஒரு நதியில் மூழ்கி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் ஓல்கா என்ற நதியில் இந்த 4 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் என்பது உறுதியாகி இருக்கிறது.

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.