செம்மரம் கடத்தியதாக திருப்பதியில் 4 தமிழர்கள் கைது

திருப்பதி:

ந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிவெட்டு வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய நபர்கள் 4 4 பேர் ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மீது கல்வீசி தாக்கயிதால், அவரகள்  துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்டவர்கள்

நேற்று நள்ளிரவு  ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், அங்கு செம்மரங் களை வெட்டி எடுத்து வந்த ஒரு கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி முனையில் 4 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம்  சேகர் ஆகிய 4 பேரும்,  திருவண்ணா மலை மாவட்டம் போளூர் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களி டமிருந்து 13 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டை களை  பறிமுதல் செய்யப்பட்டதாக வும், மற்றவர்களை தேடி வருவதாகவும் ஆந்திர காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.