திருப்பதி

திருப்பதியில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு 4 டன் மலர்கள் மற்றும் மின் விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு வேத கோஷங்களுடன் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.   வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சிறப்பு தரிசனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இன்று காலை 7 மணி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட் வாங்கியவர்களும், இலவச தரிசன டோக்கன் அளிக்கப்பட்டவர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.  காலை 9  மணி முதல் 10 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருள உள்ளார்.

அப்போது  பெண் ஊழியர்கள் மட்டும் தங்க ரதத்தின் வடத்தைப் பிடித்து 4 மாட வீதிகளிலும் இழுத்துச் செல்ல உள்ளனர்.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  நான்கு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன.