முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளனர்.
இந்த வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் எந்தெந்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பகுதியில் சாந்தனு, காளிதாஸ் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து நடித்திருக்கிறார்கள்.
கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் அஸ்வின் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் கல்கி கொச்சிலின் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் பகுதிக்கு அனிருத்தும், கெளதம் மேனன் பகுதிக்கு தர்புகா சிவாவும் இசையமைப்பாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.