தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்! தேர்தல் கமிஷனிடம் மா.கம்யூ வலியுறுத்தல்

சென்னை:

மிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது,  தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதி களுக்கும் சேர்த்து தேர்தல்நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

வரும் 18ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், டில்லியில் இருந்து  தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து இன்று  காலை 10 மணி முதல் 11:30 மணிவரை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில்  அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, அசோக் லவசா, தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஒஜா ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களடன்  அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளும்  பங்கேற்றுள்ளனர்.

அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், தமிழக 4 பேரவை தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை மனு அளித்தது.