கங்கைகொண்ட சோழபுரம் கோவில் அருகே 4 வழிச்சாலை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

ரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான  கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகே 4 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் அரசுக்கு மனு கொடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழகஅரசு எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 4வழிச் சாலையை எதிர்த்து அளித்துள்ள  மனுவை பரிசீலித்து பதில் அளிக்க  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது. அதோடு  வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.

இந்த பிரசித்தி பெற்ற கோவில்,  அரியலூர் மாவட்டத்தில் உள்ள  கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ளது. இந்த  கோவில் அருகே சுமார் 100 மீ. தூரத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்படுவதால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.

இதுதொடர்பாக அரசுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில்,  கோவில் அருகே  4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் கங்கை கொண்ட சோழபுரம் வளர்ச்சிக் குழுமம்  அறக்கட்டளை சார்பில் அதன்  தலைவர் கோமகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 3 வாராங்களுக்கு பதில் தர மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.