ஸ்ரீலங்கா:

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், இலங்கை வீரர் மலிங்கா 4 பந்தில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சாதனை படைத்தார். அதுபோல 100 விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.

இங்கிலாந்து வீரர்களை தனது யாக்கர் பந்து வீச்சால் மிரட்டிய மலிங்கா 3வது ஓவரின்போது, 3வது பந்தில் வீசிய பந்துக்கு  கொலின் முன்றோ கிளீன் போல்டாகி வெளியேறினார். இதன் காரணமாக  டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை மலிங்கை பெற்றுள்ளார்.

தொடர்ந்து மலிங்கா வீசிய 4வது பந்துக்கு  ரூதர்போர்டு எல்.பி. முறையில் ஆட்டமிழந்து வெளியேறி, 5வது பந்துக்கு டி கிராண்ஹோம்ப் போல்டாக்கி வெளியேறியதுடன், 6வது பந்தில்,  ரோஸ் டெய்லரை எல்.பி., முறையில் அவுட் ஆக்கி, 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். மலிங்காவின் சாதனைக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.