Random image

4ஆண்டு கால மோடி ஆட்சி தோல்வி: ராகுல்காந்தி கடும் தாக்கு

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏதும் நடைபெற வில்லை என்று கூறும் மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி  மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ள பேரணியும் நடைபெற்றது.  இந்நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தலைநகர் டில்லியில்  ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜ அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது,  பிரதமர் மோடி  70 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை 4 ஆண்டுகளில்  செய்ததாக கூறுகிறார். ஆனால் அது உண்மைதான் 70 ஆண்டுகளில்  இதுபோன்ற எரிபொருள் விலை உயர்வு கிடையாது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கிடையாது, விவசாயிகள் இதுபோன்று பாதிக்கப்பட்டது இல்லை என்று பதில் கூறினார்.

மேலும் பிரதமர் மோடி 2014ம் ஆண்டு பதவிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதாக வும், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு  அளிப்பதாகவும் உறுதி கூறினார். ஆனால், இந்த 4 ஆண்டுகால மோடி ஆட்சியில் இவைகள் ஏதும் செய்யப்படவில்லை. இதில் மோடி அரசு தோல்வியையே பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்க மறுத்து வருவதாகவும், விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை..  இதுகுறித்து மோடி பேச மாட்டார் என்றும்  கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேச மறுத்து வருவதாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது. ஆனால், அனைத்து பிரச்னைகளுக்கும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். மக்கள் பிரச்சனையில் மோடி அமைதியாக இருக்கிறார்.

பா.ஜ.க. அரசினால்  மக்களுக்கு நன்மை கிடைக்கும் பாக்கியம் இல்லை என்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு காரணமாக ம் சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் அழிக்கப்பட்டனர்,  மக்களை ஆத்திரமூட்டி இந்த நடைமுறைகை ஏன் அமல்படுத்தினார் எனபதை அவரால் இதுவரை  விளக்க முடியவில்லை”: மற்றும் ஜிஎஸ்டி காரணமாக சிறுகுறு மற்றும் நடுத்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.