சிபிஐயில் லஞ்ச முறைகேடு: குட்கா வழக்குகளை விசாரித்த சிபிஐ அதிகாரிகளும் மாற்றம்!

சென்னை:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிபிஐ இயக்குனர்களின் மோதல் காரணமாக பல சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

இதில், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி வழங்கியதாவும், அதில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும், சுமார் 40 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இந்த முறை கேட்டில்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மாற்றியதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா குடோன் உரிமையாளர், அரசு அதிகாரிகள் என 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சிபிஐயில் எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக, குட்கா ஊழல் குறித்து விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் குட்கா வழக்கின் விசாரணையை மேற்பார்வை செய்தவர், டிஐஜி மணிஷ்குமார் சின்ஹா உட்பட 6 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த அதிகாரியான அருண் குமார் சர்மா மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக தருண்கௌபா நியமிக்கப்பட்டுள்ளார்

இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் கூடுதல் செயலர் லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ளார். லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக குட்கா வழக்கின் விசாரணை தொய்வடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி