கவுகாத்தி:

அஸ்ஸாமில் கடந்த 100 நாட்களில் 40 யானைகள் விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளன.

அஸ்ஸாமில் உணவு மற்றும் நீர்த் தேவைக்காக மனிதர்களின் இருப்பிடத்திற்கு யானைகள் வந்து விடுகின்றன. கடந்த 100 நாட்களில் மட்டும் 40 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகியுள்ளன.

ரெயிலில் அடிபட்டும், தேயிலை தோட்டங்களில் உள்ள குழிகளில் சிக்கியும், மின்சார வேலியில் சிக்கியும் இறந்துள்ளன. காண்டாமிருகங்கள் மற்றும் புலிகள் இறப்பிற்கு அக்கறை எடுத்துக் கொள்ளும் அரசு, யானைகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.