ஈரான் பாராளுமன்றம் இன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. கடந்த வாரம் உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான அந்த தீர்மானத்தில், அனைத்து அமெரிக்கப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று ஈரான் கூறியிருந்தது.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் கூட்டங்களில் கலந்து கொள்ள, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃபுக்கு விசா மறுத்ததாக, சீனா அமெரிக்காவை விமர்சிக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. ஜனவரி 2ம் தேதி பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய புரட்சிகர காவல்படை கார்ப்ஸ்-குட்ஸ் படையின் தலைவரும், அதன் பிராந்திய பாதுகாப்பு எந்திரத்தின் கட்டிடக் கலைஞருமான ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டார்.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்த நிலையில், ஈரானின் மிக மூத்த தளபதியான கஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டதை பென்டகன் உறுதிப்படுத்தியது. அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஈரானிய ஜெனரல் சுலைமானியைக் இறந்த பின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ”ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவம் ஈரானிய புரட்சிகர காவல்படை கார்ப்ஸ்-குட்ஸ் படையின் தலைவரான காசெம் சுலைமானியைக் கொன்றதன் மூலம், வெளிநாட்டிலுள்ள அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்க அமெரிக்க இராணுவம் தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தது.

மேலும், ஈராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்களைத் தாக்கும் திட்டங்களை ஜெனரல் சுலைமானி தீட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஈரானின் புரட்சிகர காவலர்கள் அவரமாக மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில், அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையின் படி, தளபதி காசெம் சுலைமானி வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார் என்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப், வான்வழித் தாக்குதலில், ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கை, மிகவும் ஆபத்தானதோடு, முட்டாள்தனமானதும் கூட என்பது இன்று உலகமே அறிந்துள்ளது” என்று விமர்சித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் பாராளுமன்றம் இன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. கடந்த வாரம் உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான அந்த தீர்மானத்தில், அனைத்து அமெரிக்கப் படைகளையும் பயங்கரவாதிகள் என்று ஈரான் கூறியுள்ளதாக ஏ.எப்.பி கூறியுள்ளது. அதேநேரம், ஐக்கிய நாடுகளின் கூட்டங்களில் கலந்து கொள்ள, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃபுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இதனால் போர் உருவாகும் சூழல் இருப்பதாக கருதப்படுகிறது.

இத்தகைய சூழலில் சுலைமாணியின் இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றதில், நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 213 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.