சென்னை:

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், இன்று  மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.47 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 66.01 காசு களாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.  இந்த விலை உயர்வு நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து  40 காசுகள் அதிகரித்து உள்ளது. அதுபோல, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி  நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயந்தே வருகிறது. இடையிலேயே மாநில தேர்தல்கள் வரும் சமயத்தில் மட்டும் மத்திய அரசு  விலை உயர்வை கட்டுப்படுத்தி கண்ணாமூச்சி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தினசரி 5 பைசா, 10 பைசா என குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 40 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது.

இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை குறையும்போது மட்டும் சிறிய அளவில் குறைக்கும் எண்ணை நிறுவனங்கள் விலை எற்றும்போது மட்டும் அதிகமாக ஏற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.